ஆதனூரில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில், அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியின், 70 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு, எல்கையை வெற்றிகரமாக முடித்திருந்தனர். அவர்களுக்கு மெடல் மற்றும் சான்றிதழ் வழங்கி வாழ்த்தும் நிகழ்வு அகாடமியில் நடைபெற்றது. நிகழ்வில், மாணவ மாணவியர்களும் பெற்றோர்களும் திரளாக கலந்து கொண்டனர். அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமி நிறுவனர் மருத.உதயகுமார் அனைவரையும் வாழ்த்தி, மாணவர்கள் மென்மேலும் சிறப்பிடம் பெற ஆலோசனைகள் வழங்கினார்.