பேராவூரணி, பொன்னாங்கண்ணிக்காடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. ஆசிரியர் முருகையன் வரவேற்றார். தலைமை ஆசிரியர் காந்திமதி ஆண்டறிக்கை வாசித்தார். வட்டார கல்வி அலுவலர் கலாராணி முன்னிலை வகித்தார். விழாவில், பள்ளி மாணவர்கள் தங்களது கலை திறனை வெளிப்படுத்தும் வகையில், நடனம் நாடகம் முதலிய பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தி காட்டினார். விழாவில், கவுன்சிலர்கள் ஆர்.கே ராஜேந்திரன், பழனியம்மாள், ஆர்பி.ராஜேந்திரன், மருத்துவர் காந்தி, பள்ளி மேலாண்மை குழு துணை தலைவர் டாக்டர் அருண்சுதேஸ், பெற்றோர் ஆசிரியர் சங்கம் கணேசன், பள்ளி வளர்ச்சி குழு பக்கிரிசாமி, அஇஅதிமுக ஒன்றிய செயலாளர் கோவி.இளங்கோ, மெய்ச்சுடர் வெங்கடேசன், கலைச்செல்வன், சர்வேயர் கோபி, வர்த்தக சங்க பொருளாளர் சாதிக் அலி, கிராம நிர்வாக அலுவலர் விக்னேஷ் ஷர்மா, பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள், பொன்காடு கிராமத்தார்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். இறுதியாக சேகர் நன்றி கூறினார்.