தஞ்சாவூர், மார்ச்.26 -
கண்ணைக் கட்டிக் கொண்டு 18 நிமிடங்களில் இடைவிடாது 558 தோப்புக்கரணம் போட்டு, பேராவூரணியை சேர்ந்த பிராய்லர் கோழிக்கடை உரிமையாளர் தோப்புக்கரணம் ஜெ.மணிகண்டன் சாதனை படைத்துள்ளார்.
தோப்புக்கரணத்தை ஒரு உலக சாதனையாக மாற்ற முயற்சித்து, கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தொடர்ந்து இடைவிடாமல் 20 நிமிடத்தில் 558 முறை தோப்புக்கரணம் போட்டு உலக சாதனை முயற்சியில் ஈடுபட்டார்.
இதனைத் தொடர்ந்து, மேலும் குறைந்த நிமிடத்தில் அதிக முறை தோப்புக்கரணம் போட்டு சாதனை படைக்க முயற்சித்த மணிகண்டன் மார்ச். 26 செவ்வாய்க்கிழமை காலை, பேராவூரணி நீலகண்டப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் உள்ள மண்டபத்தில், இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் பிரதிநிதி நாகராஜன் என்பவர் முன்னிலையில் 18 நிமிடத்தில் 558 முறை இடைவிடாது தோப்புக்கரணம் போட்டு புதிய சாதனையை படைத்தார்.
முன்னதாக சாதனை நிகழ்ச்சியை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்கத்தின் மாநில தலைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் சாதனை நிகழ்ச்சியை நிறைவு செய்து வைத்தார்.
தொழிலதிபர்கள் கந்தப்பன், எஸ்.டி.டி சிதம்பரம், பாஸ்கர்,
நகர வர்த்தக கழக தலைவர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலாளர் திருப்பதி, பொருளாளர் சாதிக் அலி, பேராவூரணி கமலா கே.ஆர்.வி. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி பிரமுகர் தெட்சணாமூர்த்தி, உள்ளிட்டோர் சாதனை படைத்த மணிகண்டனை சால்வை அணிவித்து பாராட்டினர்.
இவரது உலக சாதனையை இன்டர்நேஷனல் பிரைட் வேர்ல்ட் ரெக்கார்ட் அமைப்பின் பிரதிநிதி நாகராஜன் அங்கீகரித்து சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கி வாழ்த்தினார். இந்த