தஞ்சை நாடாளுமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் முரசொலி செவ்வாய்க்கிழமை காலை பேராவூரணி எம்.எஸ் விழா அரங்கத்திற்கு வந்தார்.
அங்கு அவர் திமுக ஒன்றிய செயலாளர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளின், மாநில, மாவட்ட நிர்வாகிகள், ஒன்றியச் செயலாளர்கள் நகரச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு பிரிவு நிர்வாகிகளை சந்தித்து தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.
அப்போது திமுக தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளர் கா.அண்ணாதுரை எம்எல்ஏ, தலைமை செயற்குழு உறுப்பினர் பேராவூரணி நா.அசோக்குமார் எம்எல்ஏ, முன்னாள் எம்எல்ஏ ஆர்.சிங்காரம், பண்ணவயல் ராஜாத்தம்பி மற்றும் காங்கிரஸ், திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி, முஸ்லிம் லீக், தமிழக வாழ்வுரிமை கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட பல்வேறு கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.