கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமிக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கல்
சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின் அமைப்பின் கீழ் செயல்பட்டு வரும் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி மாணவ மாணவிகளுக்கு, மதன்பட்டவூர் சிவனாம்புஞ்சை தாய்மண் ஆட்டச் சாலை அமைப்பு மாணவர்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு
சிவ சதீஷ்குமார் தலைமை வகித்தார். அகாடமி பயிற்சியாளர்கள்
நீலகண்டன், சுப்பிரமணியன், அருண்குமார் மற்றும்
கௌரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில் விளையாட்டு உபகரணங்கள் அகாடமிக்கு ஒப்படைக்கப்பட்டது. வழங்கிய சத்திய சுந்தரம் IPS அவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சார்பாகவும் நன்றிகள் தெரிவிக்கப்பட்டது. விழாவில் விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர்.