தஞ்சாவூர், மார்ச்.25 -
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் முதல் நாள் நிகழ்ச்சி திங்கள்கிழமை துவங்கியது.
கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணித்திட்ட அலுவலர் முனைவர் சி.இராணி வரவேற்றார். வேதியியல் துறை முனைவர் ஏ.லோகநாதன், வணிகவியல் துறைத் தலைவர்
முனைவர் நா.பழனிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
நிறைவாக, வணிகவியல் துறை பேராசிரியர் முத்துக்கிருஷ்ணன் நன்றி கூறினார். தொடர்ந்து, ஆத்தாளூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்களின் பங்களிப்போடு தூய்மைப் பணிகள் நடைபெற்றது.