பேராவூரணி தாலுக்கா ஆதனூர் புனித அன்னாள் ஆலயத்தில், குருத்து ஞாயிறு தினத்தை ஒட்டி, கிறிஸ்தவர்கள் குருத்து ஏந்தி, பவனி வந்தனர். இந்நிகழ்ச்சிக்கு, ஆலய பங்குதந்தை அருட்திரு ஆரோக்கியசாமி துரை அடிகளார் தலைமை வகித்தார். இதில், அன்னாள் சபை அருட்சகோதரிகள் முன்னிலை வகித்தனர். முன்னதாக குருத்துகள் மந்திரிக்கப்பட்டு, பவனியை பங்கு தந்தை துவக்கி வைத்தார் குருத்து ஏந்தி, ஓசன்னா பாடி பவனி வந்தனர். நிகழ்ச்சியில் சபை நிர்வாகிகள், இறைமக்கள் பொதுமக்கள் என திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வுக்கான ஏற்பாடுகளை ஆர்.சி சபையின் செயலாளர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி பொருளாளர் அன்பானந்தம் ரயில்வே (ஓய்வு) ஆகியோர் செய்து இருந்தனர்.