பேராவூரணி, மார்ச் 26
பேராவூரணியில் தஞ்சாவூர் லோக்சபா தொகுதி பாஜ வேட்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது.
அகில இந்திய தென்னை வாரிய உறுப்பினரும், விவசாயிகள் அணி மாநில துணைத்தலைவருமான இளங்கோ தலைமை வகித்தார். தஞ்சை தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் வீரசிங்கம் வரவேற்றார்.
ஒரத்தநாடு அதிமுக எம்எல்ஏ வைத்திலிங்கம், தமாக முன்னாள் எம்எல்ஏ ரெங்கராஜன், அமமுக மாவட்ட செயலாளர் நாராயணன், தமிழர் தேச கட்சி மாவட்ட செயலாளர் முத்துக்குமார், ஐஜேகே மாவட்ட தலைவர் பச்சமுத்து, தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாவட்ட செயலாளர் ராஜா, ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து தஞ்சை லோக்சபா தொகுதியின் பாஜ வேட்பாளராக கருப்பு முருகானந்தம் கலந்து கொண்டு பேசினார்.
இதில் பாஜ நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஒன்றிய தலைவர் அய்யாவீரப்பன் நன்றி கூறினார்.