பேராவூரணி, மார்ச் 25
பேராவூரணி டாக்டர்.ஜே.ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக், மேல்நிலைப்பள்ளியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடந்தது.
லோக்சபா தேர்தல் அறிவிப்பை தொடர்ந்து ஒவ்வொரு ஓட்டுச்சாவடியில் ஒரு ஓட்டுச்சாவடி அலுவலர், 3 ஓட்டுப்பதிவு அலுவலர்கள் பணியாற்ற உள்ளனர். இவர்களில் பெரும்பாலோர் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள். இவர்களுக்கான பயிற்சி வகுப்பு 3 கட்டமாக நடக்க உள்ளது. முதற்கட்ட வகுப்பு பேராவூரணி சட்டசபை தொகுதிக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார் தலைமையில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றது.
இதில் தாசில்தார் தெய்வானை, தேர்தல் துணை தாசில்தார் பாலசுப்ரமணியன், தேர்தல் பிரிவு ஆர்.ஐ முருகேசன், ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், வருவாய்துறையினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.