நூறு நாள் வேலைத் திட்ட தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காத, மோடி அரசைக் கண்டித்து, தஞ்சை மாவட்டம், ஆவணத்தில், பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் ஏ.வி.குமாரசாமி தலைமை வகித்தார். வி.தொ.ச மாநிலத் தலைவர் வீ.அமிர்தலிங்கம், மாவட்டச் செயலாளர் ஆர்.வாசு, சிபிஎம் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.ஆர்.சிதம்பரம், லோகநாதன், ஜாக்குலின் மேரி, கோவிந்தராசு, எஸ்.பாஸ்கர், வி.தொ.ச ஆர்.மாணிக்கம், உ.பழனியப்பன், கிளைத் தோழர்கள், நூறுநாள் வேலைத் திட்ட பெண் தொழிலாளர்கள் 150 உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை திட்டத்தில நிலுவையில் உள்ள சம்பள பாக்கியை வழங்க வேண்டும். அறிவித்த வேலை நாட்களையும், கூலியையும் குறைக்காமல் வழங்க வேண்டும். ஒன்றிய மோடி அரசு 100 நாள் வேலைத்திட்டத்தை சீர்குலைக்கும் வகையில் நிதி ஒதுக்கீட்டை குறைத்ததை கண்டித்தும், குளங்கள் வெட்டுவது, வாய்க்கால் தூர் வாருவது போன்ற பணிகளை நிறுத்துவதை கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து வட்டார வளர்ச்சி அலுவலரை சந்தித்து மனு அளிக்கப்பட்டது.
நூறுநாள் வேலைத் திட்டத்தை சீர்குலைக்கும் மோடி அரசைக் கண்டித்து, பேராவூரணியில் விவசாயத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மார்ச் 09, 2024
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க