தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி தாலுக்கா ஆதனூரில் உள்ள புனித அன்னாள் உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், மாணவ மாணவியர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றோருக்கு, பரிசளிப்பு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பள்ளியின் தாளாளர் அருட்தந்தை ஆரோக்கியசாமி துரை அடிகளார் தலைமை வகித்தார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்சகோதரி ராபர்ட் கிளாரா முன்னிலை வகித்தார். ஆதனூர் பெரியவர் வேலுச்சாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெற்றி பெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார். முன்னதாக அனைத்து மாணவர்களுக்கும் இனிப்பு காரம் வழங்கப்பட்டது. பரிசு பொருள் மற்றும் இனிப்புகளை, பள்ளியின் முன்னாள் மாணவர், சிங்கப்பூரில் பணிபுரியும் கதிரேசன் நன்கொடையாக வழங்கியிருந்தார். முன்னதாக பள்ளியின் ஆசிரியர் குழந்தையம்மாள் வரவேற்புரையாற்ற, ஆசிரியர் மெர்சி ஏஞ்சலா நன்றி கூறினார்.