தஞ்சாவூர், மார்ச்.4 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், திமுக மருத்துவ அணி சார்பில், திமுக தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு, ரத்ததான முகாம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை எம்எல்ஏவும், தஞ்சை தெற்கு மாவட்ட செயலாளருமான கா.அண்ணாதுரை முகாமை துவக்கி வைத்தார். பேராவூரணி எம்எல்ஏவும், தலைமை செயற்குழு உறுப்பினருமான நா.அசோக்குமார் முன்னிலை வகித்து ரத்த தானம் செய்தவர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். இதில், மாநில மருத்துவர் அணி துணைச் செயலாளரும், தஞ்சை மாநகராட்சி துணை மேயருமான டாக்டர் அஞ்சுகம் பூபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முகாமில் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவக்குழுவினர் 71 யூனிட் ரத்தத்தை தானமாகப் பெற்றனர். நிகழ்ச்சியில், திமுக ஒன்றியச் செயலாளர்கள், மு.கி.முத்துமாணிக்கம், க.அன்பழகன், வை.ரவிச்சந்திரன், கோ.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், நெசவாளர் அணி மாவட்ட அமைப்பாளர் பன்னீர்செல்வம், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி, கல்லூரி பேராசிரியர்கள், திமுக மருத்துவ அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.