தஞ்சாவூர், மார்ச்.18 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே.சி.குமரப்பா பள்ளியில் 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பிரியாவிடை பெறும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளரும், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவருமான முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்து பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார். பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர்பிச்சை, குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின் கணபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவிகள் பள்ளியுடனான தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். நிறைவாக மாணவ, மாணவிகள் சார்பில், தங்களுக்கு பயிற்றுவித்த ஆசிரியர், ஆசிரியைகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.