பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மகளிர் நாள் விழா சிறப்பாக நடைபெற்றது.வளாகத்தில் அமைந்துள்ள பாரதி தையல் பயிற்சிப் பள்ளி ஆசிரியர் நித்யா தலைமையில் நடைபெற்ற விழாவில் பயிற்சி பள்ளி ஆசிரியர் உமா, பேராசிரியர் முனைவர் சண்முகப்பிரியா, பேராசிரியர் பிரபா, பேராவூரணி கிழக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி யின் பள்ளி மேலாண்மை குழு தலைவி சரண்யா முன்னிலை வகித்தனர். திராவிட விடுதலைக்காக பொறுப்பாளர் சித.திருவேங்கடம், மெய்ச்சுடர் நா.வெங்கடேசன், ஆசிரியர் காஜாமுகைதீன், ஐன்ஸ்டீன் ஹாக்கிங் அறிவியல் மன்ற பொறுப்பாளர் தா.கலைச்செல்வன், பாரதி ந.அமரேந்திரன், சமூக செயல்பாட்டாளர் கொன்றை வெ.சிவக்குமார் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இல்லம் தேடி கல்வித் திட்ட ஆசிரியர்கள் மைமுன் சுலைகா, சரண்யா, நிவேதா, நூலக வாசகர் வட்ட உறுப்பினர்கள் ஜெயந்தி, மங்கையற்கரசி, சத்யா, லட்சுமி பிரியா, பிரியா மற்றும் தையல் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்வில் சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட பெண்கள் கதை, கவிதை, பாடல் என தங்களின் தனித்திறன்களை வெளிப்படுத்தினர்.
பேராவூரணி பெரியார் அம்பேத்கர் நூலகத்தில் மகளிர் நாள் விழா
மார்ச் 09, 2024
1 minute read
0
Tags
பிற பயன்பாடுகளுக்குப் பகிர்க