பேராவூரணி அருகே தென்னங்குடி கிராமத்தில் அஷ்ட பைரவர் பைரவ பரிவார சஹித ஸ்ரீகாலபைரவர் திருக்கோயில் ஸ்ரீ ஏகாதச மஹாருத்ர யாக பெருவிழா நடந்தது.
தென்னங்குடி கிராமத்தில் ஸ்ரீகாலபைரவர் திருக்கோயிலில் நான்கு திரு ஆயுதங்களுடன் நின்ற கோலத்தில் ஷேத்ர பாலகாரக தனிக்கோயில் கொண்டு அருள்பழித்து வருகிறார். தென்னங்குடி ஸ்ரீகாலபைரவருக்கு மாசி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியும், அனுஷம் நட்சத்திரமும், சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் ஸ்ரீஏகாதச மகா ருத்ர யாகமும், சிறப்பு அபிஷேகமும், அலங்காரமும், தீவிர்த்தனையும் நடைபெற்றது. மேலும் அன்னதானம் நடந்தது. தென்னங்குடி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கிருஷ்ணதேவன் கரைதாரர்கள் மற்றும் தென்னங்குடி கிராமத்தார்கள் செய்திருந்தனர்.