பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில், பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை சார்பில் இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வுக்கு, அறக்கட்டளை நிர்வாகி ஏசியன் முகமது முஸ்கிர் தலைமை வகித்தார். பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை தலைவர் நாகேந்திர குமார், செயலாளர் சண்முகநாதன் மற்றும் பொருளாளர் வன்மீகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்வில், பேராவூரணி நகர வர்த்தக கழக முன்னாள் பொருளாளர் ஜகுபர் அலி, செய்தியாளர்கள் ராஜா மற்றும் பழனியப்பன், அறக்கட்டளை நிர்வாகிகள் வெங்கடேசன், செந்தில்குமார், முனைவர் வேத கரம்சந்த் காந்தி, தாமரைச்செல்வன் மற்றும் சீனிவாசன், கனி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்வில், பள்ளிவாசல் இமாம் மற்றும் ஊழியர்களுக்கு, ரமலான் பரிசாக புத்தாடை வழங்கப்பட்டது. பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் தலைவர் முத்தலிப் மற்றும் பொருளாளர் கான் முகமது ஆகியோர் வரவேற்றனர். கடந்த இரண்டு வருடங்களாக இந்த சமூக நல்லிணக்க நிகழ்வை நடத்திவரும் பேரை துளிர் நண்பர்கள் அறக்கட்டளை நிர்வாகிகள், இந்த நிகழ்வை இனி ஆண்டுதோறும் தொடர்ந்து நடத்தி, சமூக நல்லினத்திற்கு எடுத்துக்காட்டாய் திகழ்வோம் என்றனர்.