தஞ்சாவூர், ஏப்.27 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவர்கள், கிராமத்தில் தங்கி பணி அனுபவப் பயிற்சி பெற்று வருகின்றனர்.
இதனொரு பகுதியாக, பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தில், போர்டாக்ஸ் கலவை தயாரிப்பு, அதன் பயன்கள் பற்றிய செயல் விளக்கத்தை விவசாயிகளுக்கு செய்து காட்டினர்.
இந்தக் கலவையை தெளிப்பதன் மூலம், தோட்டக்கலை பயிர்களில் பூஞ்சை நோய்களான கால் அழுகல் நோய், தண்டு அழுகல் நோய், இலை கருகல் நோய், இலைப்புள்ளி நோய் ஆகியவற்றை கட்டுப்படுத்தலாம் என விவசாயிகளுக்கு வேளாண் மாணவர்கள் விளக்கமளித்தனர்.