தஞ்சாவூர், ஏப்.26 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியில் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, அதிமுக தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் சி.வி.சேகர் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் எம்.எஸ். நீலகண்டன் வரவேற்றார். பேராவூரணி ஒன்றியப் பெருந்தலைவர் சசிகலா ரவிசங்கர், ஒன்றிய செயலாளர்கள் உ.துரைமாணிக்கம்,
கோவி.இளங்கோ,
கே.எஸ்.அருணாசலம், மாவட்ட மாணவர் அணி இணைச் செயலாளர்
ஆர்.பி.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகரக் கழகம் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கட்சியினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, பொதுமக்களுக்கு தர்பூசணி, வெள்ளரி, ஆரஞ்சு பழம், நீர்மோர், பானாக்கம், குடிநீர் ஆகியவை வழங்கப்பட்டன. 3மாத காலம் தண்ணீர் பந்தல் இயங்கும் என அதிமுகவினர் தெரிவித்தனர்.