பேராவூரணி, தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக, ஓய்வு பெறும் ஆசிரியர்கள் கணேசன், வாசுகி, லதாஸ்வரி, சாந்தி, மாலதி மற்றும் லைலா ஆகியோரின் பணி நிறைவு பாராட்டு விழா, நாளை காலை 9 மணிக்கு, எஸ்டிடி ரெசிடென்சியில் நடைபெற இருக்கிறது. இதுகுறித்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் செ.ராகவன்துரை கூறுகையில், " நாளை நடைபெறும் மாநிலம் தழுவிய பணிநிறைவு பாராட்டுவிழாவில் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர், அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணைப்பொதுச்செயலாளரும், உலகத் தமிழாசிரியர் பேரவையின் பொதுச் செயலாளருமான ந.ரெங்கராஜன் அவர்களும், மாநில தலைவர் மு.லெட்சுமி நாராயணன் அவர்களும், மாநில பொருளாளர் இரா.குமார் அவர்களும் மற்றும் அனைத்து மாவட்டங்களை சேர்ந்த மாவட்டச் செயலாளர்களும்,மாநில துணைத்தலைவர்களும், மாநில துணைச் செயலாளர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளார்கள். எனவே இவ்விழாவில் தாங்கள் தவறாது கலந்து கொண்டு சிறப்பிக்க அன்போடு வேண்டுகிறேன்" என்றார்.