பேராவூரணி, மார்ச்.31 -
பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார் எனும் நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில், ஞாயிற்றுக்கிழமை மாலை, நகர வர்த்தகர் கழகம் சார்பில், புனித ரமலான் மாதத்தையொட்டி நோன்பு துறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் நகர வர்த்தகர் கழகத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் சாதிக் அலி, கட்டுப்பாட்டு கமிட்டி உறுப்பினர்கள் கந்தப்பன், சிதம்பரம், லட்சுமணன் மற்றும் வர்த்தகர் கழக நிர்வாகிகள், இஸ்லாமிய பெருமக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் இமாம் மற்றும் ஊழியர்களுக்கு புத்தாண்டை ரமலான் பரிசாக வழங்கப்பட்டது. அனைவரையும் ஜமாலியா பள்ளிவாசல் நிர்வாகத்தின் சார்பில் தலைவர் முத்தலிப், பொருளாளர் கான் முகமது ஆகியோர் வரவேற்றனர். இந்த நிகழ்ச்சி மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது.