தஞ்சாவூர், ஏப்.01 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நாட்டு நலப்பணித்திட்ட அலகு- 2, சார்பில், சிறப்பு முகாம் துவக்க விழா சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடைபெற்றது.
முகாமிற்கு, அரசுக் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்தார். நாட்டு நலப் பணி திட்ட அலுவலர் முனைவர் ஆர்.ராஜ்மோகன் வரவேற்றார். தமிழ் துறை தலைவர் சி.ராணி சிறப்புரையாற்றினார்.
இதில், பேராசிரியர்கள் நித்தியசேகர், வினோத்குமார், சதீஷ்குமார் மற்றும் மாணவ,மாணவிகள் கலந்து கொண்டனர். நிறைவாக நாட்டு நலப்பணித்திட்ட மாணவி
க.அபிநயா நன்றி கூறினார்.
கழனிவாசல் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகம் மற்றும் அப்பகுதியில் உள்ள முக்கிய இடங்களில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர். இந்த சிறப்பு முகாம் மார்ச்.31 முதல் ஏப்.6 வரை நடைபெறுகிறது.