பேராவூரணி பேரூராட்சிக்கு உட்பட்ட கூப்புளிக்காடு கிராமத்தில் கருப்பையன் என்பவரது வீடு, நேற்று இரவு தீப்பிடித்து எரிந்ததை அறிந்த அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தெற்கு ஒன்றிய செயலாளர் கோ இளங்கோ தலைமையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தாருக்கு நிவாரணம் வழங்கி ஆறுதல் தெரிவிக்கப்பட்டது. அதில், சேதுபவாசத்திரம் ஒன்றிய கழகச் செயலாளர் கே.எஸ்.அருணாச்சலம், மாவட்ட பிரதிநிதி கோ.பா.ரவி,
எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாண்டியராஜன்,
பாசறை செயலாளர் கணேசன் ஒன்றிய தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் R.K.சிவா, நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் அருள்,
பேரூராட்சி கவுன்சிலர்கள் பழையபேராவூரணி ஆனந்தன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் கூப்புளிக்காடு மூர்த்தி, ஆதனூர் ஆனந்தன், பழையபேராவூரணி கிருஷ்ணமூர்த்தி, டி.கே.சுப்பிரமணியன்,
உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.