பேராவூரணி அமிழ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், 12 நாட்கள் கோடைகால சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் யோகா, சிலம்பம், மற்றும் உடற்பயிற்சி வகுப்புகள் சிறப்பாக நடைபெற்றன. அதன் நிறைவு விழா மற்றும் சான்றிதழ் வழங்கும் விழா புதுப்பட்டினம் கடற்கரையில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, அகாடமியின் நிறுவனர் மருத.உதயகுமார் தலைமை வகித்தார். நிகழ்வில், அகாடமியின் தலைவர் முனைவர் வேத கரம்சந்த் காந்தி, கராத்தே பயிற்சியாளர் ராஜா, அகாடமி நிர்வாக இயக்குனர் பிரவீனா, பெற்றோர் சங்க தலைவர் பேபி ரபிகா, செயலாளர் நித்யா, மற்றும் பெற்றோர்கள் திரளாக கலந்து கொண்டனர். கோடைகால பயிற்சி முகாமில் சிறப்பாக பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் கேடயம் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.