தஞ்சாவூர், மே.22 -
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் காலாவதியான, கெட்டுப் போன உணவுப் பொருட்களை விற்பனை செய்த கடைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறையினர் அபராதம் விதித்ததோடு, தற்காலிகமாக கடைக்கு சீல் வைத்தனர்.
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப் உத்தரவின்படியும், மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் சித்ரா அறிவுறுத்தலின்படியும், சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில், பேராவூரணி, பட்டுக்கோட்டை வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் வேல்முருகன் தலைமையில் காவல்துறை உதவி ஆய்வாளர், துப்புரவு ஆய்வாளர் உள்ளடக்கிய குழுவினர் சேதுபாவாசத்திரம், மல்லிப்பட்டினம், சம்பைபட்டினம், செந்தலைப்பட்டினம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கடைகளில் சோதனை நடத்தினர்.
இதில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் மற்றும் கெட்டுப்போன, காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த 4 கடைகளுக்கு அபராதம் விதித்ததோடு தற்காலிகமாக கடையை மூடி சீல் வைத்தனர்.