பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் தொடக்கம்.

IT TEAM
0


ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய, பேராவூரணி அரசு கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் :
கல்லூரி முதல்வர் தகவல்

தஞ்சாவூர், மே.6 - 
தஞ்சாவூர் மாவட்டம், 
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பேராவூரணி அரசு கலைக்கல்லூரியில் பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்), பி.காம், பி.பி.ஏ, பி.எஸ்சி கணினி அறிவியல், பி.எஸ்சி கணிதம், பி.எஸ்சி இயற்பியல், பி.எஸ்சி வேதியியல், மற்றும் எம்.ஏ(தமிழ்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு மாணவ, மாணவிகள் சேர்க்கை நடைபெறவுள்ளது. 

பிளஸ்-2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆன்லைனில் விண்ணப்பங்கள் பதிவு செய்ய பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கை உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இந்த மையம் 06.05.2024 முதல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்படும். மாணவர்கள் சேர்க்கை விண்ணப்பங்கள் ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மேலும் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tngasa.in செய்யலாம். இணையதள முகவரியில் பதிவு செய்யலாம்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top