பேராவூரணி தாலுக்கா ஆதனூர் கிராமத்தில் பாஸ்கா எனும் இயேசு கிறிஸ்துவின் வரலாற்று நாடகம் இரண்டு நாட்கள் நடைபெற்றது. நிகழ்விற்கு ஆதனூர் பங்கு தந்தை ஆரோக்கியசாமி துரை, அருள் தந்தையர்கள் ஆரோக்கியசாமி மற்றும் ஆரோன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக அருள்தந்தையர்களின் கூட்டுப் பாடல் திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து வரலாற்று நாடகம் நடித்து காண்பிக்கப்பட்டது. ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த 40க்கும் மேற்பட்ட நடிகர்கள் பல்வேறு கதாபாத்திரங்களை ஏற்று நடித்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை புனித சேவியர் பாஸ்கா மன்றத்தினர் செய்திருந்தனர்.