தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் இருபுறமும் கருவேல மரங்கள் விபத்துகள் ஏற்படும் வண்ணம் படர்ந்து காணப்பட்டன. அதிலும் குறிப்பாக மல்லிப்பட்டினம் ஐஓபி வங்கியிலிருந்து காயிதே மில்லத் நகர் எதிரே உள்ள சாலை வரை கருவேல மரங்கள் கிழக்கு சாலை வரை படர்ந்து காணப்பட்டது. இதனால் சாலையில் செல்லக்கூடிய வாகனங்கள் சரியாக தெரியாமல் விபத்துகள் ஏற்படும் அபாய சூழல் இருந்தது.
மேலும் இதனை அகற்ற காசீம் அப்பா தெருவாசிகள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து எஸ் டிபிஐ கட்சியின் மல்லிப்பட்டினம் நகர பொறுப்பாளர்கள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றும் பணியில் ஈடுபட்டு அகற்றி வருகின்றனர். மேலும் ஆண்டிக்காடு ஊராட்சி சார்பில் ஊராட்சி மன்றத் தலைவர் வரதராஜன் ஏற்பாட்டின் பேரிலும் கருவேல மரங்களை அகற்றி வருகின்றனர்.
கருவேல மரங்களை அகற்றி கோரிக்கையை நிறைவேற்றிய எஸ் டபிஐ கட்சிக்கும், ஆண்டிக்காடு ஊராட்சி மன்றத்திற்கும் காசீம் அப்பா தெரு, வடக்குத் தெரு பொதுமக்கள் நன்றி கூறினர்.