தஞ்சாவூர், மே.7 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரம் செருவாவிடுதி கிராமத்தில், புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் கிராம வேளாண் அனுபவத் திட்டத்தின் ஒரு பகுதியாக கால்நடை தடுப்பூசி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. திருச்சிற்றம்பலம் கால்நடை மருத்துவர், செந்தில்குமரன் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில் 400 ஆடுகளுக்கு ஆட்டுக்கொல்லி தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் பசுமாடுகளுக்கு சினை ஊசி மற்றும் கோழிகளுக்கு மருந்துகளும் வழங்கப்பட்டது. இம்முகாமில் கால்நடை ஆய்வாளர் கவிதா, புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் மற்றும் கிராம மக்கள் பலர் கலந்து கொண்டனர்.