அதிமுக சார்பில் பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு போர்வை வழங்கல்

IT TEAM
0

 


தஞ்சாவூர், மே.13 - 

தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பிறந்த நாளை முன்னிட்டு, அதிமுக பேராவூரணி தெற்கு ஒன்றியம் சார்பில், தஞ்சை மாவட்டம், பேராவூரணி பெருந்தலைவர் காமராஜர் அரசு மருத்துவமனைக்கு, நோயாளிகளின் பயன்பாட்டிற்கு என ரூபாய் 25 ஆயிரம் மதிப்பிலான 100 போர்வைகள் வழங்கப்பட்டது.


இதனை, முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அதிமுக மாநில விவசாய அணி இணைச் செயலாளருமான  மா.கோவிந்தராசு தலைமை வகித்து அரசு மருத்துவமனை மருத்துவர் ராமசாமியிடம் வழங்கினார். 


பேராவூரணி அதிமுக தெற்கு ஒன்றியச் செயலாளர் கோவி.இளங்கோ, 

சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அருணாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


இந்நிகழ்ச்சியில், அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பாலகுமார், சினேகா பிரியதர்ஷினி, ரம்யா தேவி, செவிலியர் கே.லதா, அதிமுக நிர்வாகிகள், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் ஆர்.பி.ராஜேந்திரன், பெருமகளூர் பழனியப்பன், கிளைச் செயலாளர்கள் சோமசுந்தரம், தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றியச் செயலாளர் ஆர்.கே.சிவா, தகவல் தொழில்நுட்ப பிரிவு நகர துணைச் செயலாளர் அருள் செல்வன், மாவட்ட பிரதிநிதி கோ.ப.ரவி, எல்ஐசி காந்தி, முதுகாடு சிவலிங்கம், டி.கே.சுப்பிரமணியன், வழக்குரைஞர் முத்துவேல், திருப்பதி மற்றும் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top