குமரப்பா பள்ளியில் தமிழ்நாடு சைவ சமய பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா

IT TEAM
0


பேராவூரணி குமரப்பா பள்ளியில் தமிழ்நாடு சைவ சமய பயிற்சி மன்றம் சார்பில் பள்ளி மாணவர்களுக்கு இலவச சைவ சமய வாழ்வியல் பயிற்சி வகுப்பு நிறைவு விழா நடந்தது.





தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். குமரப்பா பள்ளி நிர்வாக இயக்குனர் நாகூர்பிச்சை முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர் மதியழகன் வரவேற்றார்.


ஆம்பல் முருக வைத்திலிங்கம் நல்லாசியோடு 12ஆம் ஆண்டு பயிற்சியில் அப்பர் தமிழ் மன்ற செயலர் நல்லாசிரியர் புவனசுந்தரலெட்சுமி, பயிற்றுனர்கள் கார்த்திகேயன், லட்சுமி, மதியழகன், அப்பர்பகலவன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு இறை வழிபாட்டு முறை, தேவாரம், திருவாசகம், கந்தபுராணம், பெரியபுராணம் குறித்து பயிற்சி அளித்தனர். கடந்த ஏப்ரல் 25 வியாழக்கிழமை தொடங்கி மே 1 புதன்கிழமை வரை பயிற்சி வகுப்பு நடைபெற்றது.


இதில் ஊமத்தநாடு ஊராட்சி தலைவர் குலாம்கனி, தலைமை ஆசிரியர் மனோகரன், குமரப்பா அறக்கட்டளை பொருளாளர் அஸ்வின்கணபதி, திருக்குறள் நெறியாளர் தங்கவேலனார், ஓய்வு பெற்ற ஆசிரியர் பன்னீர்செல்வம், தலைமை குருசாமி நடராஜன், பயிற்றுனர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top