குவைத் தீ விபத்தில் இறந்த ஆதனூர் ஆனந்த மனோகரன் மற்றும் லதா தம்பதியரின் மூத்த மகன் புனாப் ரிச்சர்ட் ராய்(வயது 28), உடல் நேற்று இரவு 12.10 க்கு சொந்த ஊரான ஆதனூர் கிராமத்திற்கு கொண்டுவரப்பட்டு, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. தொடர்ந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் தீபக் ஜேக்கப், கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் ஆகியோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். தமிழக அரசு அறிவித்திருந்த நிவாரண தொகையான ரூபாய் 5 லட்சத்திற்கான காசோலையை புணாப் ரிச்சர்ட் ராயின் தந்தை ஆனந்த மனோகரிடம் ஆட்சித் தலைவர் வழங்கினார். தொடர்ந்து, சவப்பெட்டி திறக்கப்படாமலேயே, ஆர் சி ஆலயத்திற்கு உடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டு பின்னர் கல்லறை தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.