பேராவூரணி, ஜூன் 15
பேராவூரணியில் சுவாமி விவேகானந்தர் பேரவை, மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையுடன் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.
சுவாமி விவேகானந்தர் பேரவையின் தலைவர் நீலகண்டன் தலைமை வகித்து, முகாமை தொடங்கி வைத்தார். செயலாளர் கேசவன், பொருளாளர் பன்னீர்செல்வம், ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கண்புரை, சர்க்கரை நோய் காரணமாக ஏற்படும் கண் பார்வை கோளாறு, சிறுவர்களுக்கான கண் நோய், கிட்டப்பார்வை, தூரப்பார்வை போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் 499 கண் நோயாளிகள் பரிசோதிக்கப்பட்டதில் 148 நபர்கள் அறுவை சிகிச்சைக்காக மதுரை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். முகாமிற்கான ஏற்பாடுகளை கவுதமன், சிவேதிநடராஜன், வீரசிங்கம், வீரப்பன், முத்துகுமார், நீலவன், ஆகியோர் செய்திருந்தனர். பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.