தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியம் கழனிவாசல் ஊராட்சியில் உள்ள ஐந்தாவது வார்டு செட்டியார் தெரு செல்லும் சாலையை தார் சாலையாக சீரமைத்து தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து சமூக ஆர்வலர் கழனிவாசல் தாமரைச்செல்வன் கூறுகையில், " கடந்த ஒரு வருடமாக கவனிப்பார் இன்றி கிடைக்கும் இந்த சாலையை சீரமைத்து தர வேண்டும் என பல்வேறு முறை கோரிக்கை மனு செய்தும் அதற்கு எந்த பதிலும் இல்லை. மழைக்காலங்களில் போக்குவரத்திற்கு மிகுந்த சிரமம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை தார் சாலையாக்கி தர பணிகளை தொடங்க வேண்டும்" என்றார்