தஞ்சாவூர், ஜூன்.23 -
பேராவூரணி தனியார் திருமண மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் திருமுருகன் தலைமை வகித்தார். மாநிலத் தலைவர் மாயாண்டி சங்கக் கொடியேற்றி பெயர் பலகையை திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், மாநிலச் செயலாளர் அருண், மாநில பொருளாளர் சோலையப்பன், அமைப்பு செயலாளர் ரமேஷ், மாநில துணைத்தலைவர் திருமலை ராஜன், மாநில இணைச்செயலாளர் ரமேஷ் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதிய கிளைத்தலைவராக செல்வராஜ், கிளைச் செயலாளராக சண்முகம், கிளை பொருளாளராக மாரிமுத்து, கிளை துணைத் தலைவராக மணியரசன், கிளை துணைச் செயலாளராக ராஜேந்திரன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மின் பணியாளர்களுக்கு என தனியாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.