தஞ்சாவூர், ஜூன்.10 -
பேராவூரணி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது.
தஞ்சை மாவட்டம், பேராவூரணியில் அரசு மற்றும் கலை அறிவியல் கல்லூரி 2023-14 ஆண்டு துவக்கப்பட்டு தற்காலிக கட்டிடத்தில் இயங்கி வந்தது. தற்போது முடச்சிக்காடு பகுதியில் சொந்த கட்டிடத்தில் 2016 ஆம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
இந்நிலையில், முதலாவது ஆண்டு மாணவர்கள் சேர்க்கை முதல்கட்ட கலந்தாய்வு திங்கள்கிழமை காலை 10 மணிக்கு தொடங்கியது.
இதில், கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தலைமை வகித்துப் பேசினார். கல்லூரியில் முதலாம் ஆண்டு இளநிலை பட்டப் படிப்பில் சேர 4,523 மாணவ, மாணவிகள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து இருந்தனர்.
திங்கள்கிழமை நடைபெற்ற முதல் கட்ட கலந்தாய்வில் பி.காம், பி.பி.ஏ, பி.ஏ (தமிழ்), பி.ஏ (ஆங்கிலம்) ஆகிய பாடப்பிரிவுகளுக்கு நடைபெற்றது. (ஜூன்.11) செவ்வாய்க்கிழமை பி.எஸ்சி கணிதம், இயற்பியல், வேதியியல், கணினி அறிவியல், பி.ஏ தமிழ், பி.ஏ.ஆங்கிலம் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு கலந்தாய்வு நடைபெறும்.
அரசு விதிமுறைகளின்படி
மதிப்பெண்கள் மற்றும்
இனசுழற்சி அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். விண்ணப்பித்துள்ள தகுதியுடைய அனைவருக்கும் சேர்க்கை கிடைக்கும். முதலாம் ஆண்டு வகுப்புகள் அடுத்த மாதம் ஜூலை.3 ஆம் தேதி தொடங்கும். 2, 3 ஆம் ஆண்டு வகுப்புகள் முன்னதாகவே ஜூன்.19 இல் தொடங்கும் என உயர் கல்வித்துறை அறிவித்துள்ளது"
இவ்வாறு கல்லூரி முதல்வர் முனைவர் இரா.திருமலைச்சாமி தெரிவித்தார்.