பேராவூரணியில், ஜூன்.13 இல் வருவாய் தீர்வாயம் துவக்கம்

IT TEAM
0

 



தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்தில் உள்ள, அனைத்து வருவாய் கிராமங்களிலும், கிராம நிர்வாக அலுவலர்களால் பராமரிக்கப்பட்டு வரும் வருவாய் கணக்குகளை தணிக்கை செய்யும் பொருட்டு 1433 ஆம் பசலி ஆண்டு வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ தலைமையில், பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. 


வரும் ஜூன் 13ஆம் தேதி வியாழக்கிழமை பெருமகளூர் உள் வட்டத்திற்கும், 14ஆம் தேதி வெள்ளிக்கிழமை குருவிக்கரம்பை உள் வட்டத்திற்கும், 18 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை ஆவணம் உள் வட்டத்திற்கும், 20ஆம் தேதி வியாழக்கிழமை பேராவூரணி உள் வட்டத்திற்கும் நடைபெற உள்ளது. 


வருவாய் தீர்வாயம் குறிப்பிட்ட நாட்களில் காலை 10 மணிக்கு பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறும். பொதுமக்கள் தங்களது மனுக்களை, முதல்வரின் முகவரி என்னும் இணையதளத்தில் இணைய வழியாக cmhelpline-dashboard.tnega என்ற

இணையதள முகவரியிலோ அல்லது இ - சேவை மையங்களின் மூலமாகவோ, வருவாய் தீர்வாயத்தில் மனுக்களை பதிவு செய்ய வேண்டும். வருவாய் தீர்வாயத்தில் பொதுமக்களிடம் பெறப்படும் மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்படும்" என பேராவூரணி வருவாய் வட்டாட்சியர் தெய்வானை தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top