வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்க வந்த தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலிக்கு பேராவூரணியில் வரவேற்பு
இந்தியா கூட்டணி சார்பில் தஞ்சை நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக முரசொலி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்நிலையில் தன்னை வெற்றிபெறச் செய்த, பேராவூரணி தொகுதி பொது மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை பேராவூரணிக்கு வருகை தந்தார். அவருக்கு பேராவூரணி எம்எல்ஏ நா.அசோக்குமார் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற உறுப்பினர் முரசொலி அண்ணா சிலை, பெரியார் சிலை, அம்பேத்கர் சிலை ஆகியவற்றிற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், கடை வீதியில் நடந்து சென்று பொதுமக்களிடம் நன்றி தெரிவித்தார். அப்போது தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளரும பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருமான
கா.அண்ணாதுரை, மாவட்ட அவைத்தலைவர் சுப.சேகர்,
மற்றும், ஒன்றியச் செயலாளர்கள் முத்துமாணிக்கம், அன்பழகன், இளங்கோவன், நகரச் செயலாளர் சேகர், கட்சி நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.