தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு டிட்டோஜாக் சார்பில் அரசாணை 243 ஐ ரத்து செய்யக் கோரி மாநில முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட அனைத்து தொடக்க நிலை ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த பொறுப்பாளர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்