பேராவூரணி, ஜூன் 4
பேராவூரணி ஸ்ரீ வெங்கடேஸ்வரா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் 23ம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடந்தது.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்வி குழும செயலாளர் அமர்வாஞ்சிதா தலைமை வகித்தார். திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் துணை வேந்தர் முனைவர் செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் பட்டமளித்து பேசினார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழும தாளாளர் ஜீவகன்அய்யநாதன் கலந்து கொண்டு பட்டம் பெற்ற மாணவ, மாணவிகளை வாழ்த்திப் பேசினார்.
பட்டமளிப்பு விழாவில், இளங்கலை, முதுகலை 847 பேருக்கும், கல்வியியலில் 252 பேருக்கும் ஆக மொத்தம் ஆயிரத்து 99 பேருக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது. பல்கலைக்கழக தரவரிசையில் சிறப்பிடம் பெற்றவர்களுக்கு பதக்கங்கள் வழங்கப்பட்டது.
இதில் எம்.எல்.ஏ அசோக்குமார், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கல்விக் குழும தலைவர் லெனின், கல்வி குழும நிர்வாகிகள், அறங்காவலர்கள், கல்லூரி, கல்வியியல் முதல்வர்கள், துறை தலைவர்கள், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.