பேராவூரணி, ஜூலை 1
பேராவூரணியில் ரோட்டரி கிளப் நிர்வாகிகள் பணியேற்பு விழா நடந்தது.
முன்னாள் மாவட்ட ஆளுநர் ரமேஷ்பாபு, உதவி ஆளுநர் சிவச்சந்திரன் ஆகியோர் புதிய உறுப்பினர்களை சங்கத்தில் இணைத்து வைத்து பேசினர்.
தலைவராக ரவிச்சந்திரன், செயலாளராக செந்தில்குமார், பொருளாளராக வீரராகவன் ஆகியோர் பணி ஏற்றுக் கொண்டனர். தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்வில் முன்னாள் தலைவர்கள் நாகராஜன், சுப்பிரமணியன், திருப்பதி, கிளப் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.