பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக பேராவூரணி அரசு மருத்துவமனையில், 58-வது வாரமாக 200 புறநோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட இணை பொருளாளர் எம். நீலகண்டன், சாசனப் பொருளாளர்
எஸ்.மைதீன் பிச்சை, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ எஸ் ஏ தெட்ணாமூர்த்தி, முதல் துணைத் தலைவர் ஜிவி.ராஜ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சங்கச் செயலாளர் ஜி.குமாரன், முன்னாள் செயலாளர்கள் டி வி குமார்(எ) பி.பழனிவேல் முன்னாள் பொருளாளர்கள் பி.பன்னீர்செல்வம், ஏ.சபரி குமார், சிவானந்தம், சங்க உறுப்பினர்கள் ஜி.பிரதீஷ், ராஜசேகர்
ஆகியோர் கலந்து கொண்டார்கள்.