பேராவூரணி உதவி செயற்பொறியாளர் எஸ்.கமலக்கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பேராவூரணி துணை மின் நிலையத்திற்கு புதிதாக 110 கிலோ வாட் உயர் மின் கோபுர பணிகள் நடைபெற இருப்பதால், வருகிற வியாழக்கிழமை 18.07.2024 அன்று ஆவணம் 33/11 கேவி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் துலுக்கவிடுதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும், ஆவணம் யூனியன், ஆவணம் சிவன் கோயில், ஆவணம் செக்போஸ்ட், துலுக்கவிடுதி வடக்கு மற்றும் நெடுவாசல் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்படுகிறது.