தீ விபத்தில் பாதிக்கப்பட்ட மூதாட்டிக்கு அதிமுக சார்பில் நிதியுதவி

IT TEAM
0

 


தஞ்சாவூர், ஜூலை.28 - 

தஞ்சை மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள பெருமகளுர் பேரூராட்சி 1ஆவது வார்டு பகுதியில் வசித்து வருபவர் நீலா (வயது 85). இவரது கணவர் வடுகநாதன் ஏற்கனவே இறந்து விட்டார். மூதாட்டி நீலா, மனநலன் பாதிக்கப்பட்ட அவரது தங்கையுடன் தனியாக கூரை வீட்டில் வசித்து வருகிறார். 


இரு தினங்களுக்கு முன் நீலா கூலி வேலைக்கு சென்ற நிலையில், மின் கசிவு காரணமாக இவரது கூரை வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனே வந்து போராடி தீயை அணைத்துள்ளனர். இதில் வீட்டில் இருந்த பொருட்கள்

தீயில் கருகி நாசமானது. 


இந்நிலையில், தகவல் அறிந்த பேராவூரணி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மா.கோவிந்தராசு அறிவுறுத்தலின் பேரில்,

அவரது மகனும் பேராவூரணி அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளருமான கோவி. இளங்கோ, சேதுபாவாசத்திரம் தெற்கு ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.அருணாசலம், முன்னாள் கயிறு வாரியத் தலைவர் நாடாகாடு 

எஸ்.நீலகண்டன், மாவடுகுறிச்சி பெருமாள், பெருமகளூர் பழனியப்பன் ஆகியோர் பாதிக்கப்பட்ட மூதாட்டி நீலாவை ஞாயிற்றுக்கிழமை சந்தித்து நிதி உதவி வழங்கி ஆறுதல் கூறினர்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top