பேராவூரணி கோக்கனட் சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பில் கார்கில் போர் வெற்றியின் விழா, டாக்டர் அப்துல் கலாம் நினைவு தினம் மற்றும் சங்க நெறிப்படுத்துதல் விழா ஆகிய முப்பெரும் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்வுக்கு, சங்கத் தலைவர் நா.ப.ரமேஷ் தலைமை வசித்தார். வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்ட இணை பொருளாளர் எம்.நீலகண்டன், மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவர் துரை.நீலகண்டன் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். விழாவில், லயன்ஸ் சங்க பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் திரளானோர் கலந்துகொண்டனர். நிகழ்வினை, பொருளாளர் குமரன், செயலாளர்கள் ந. ரவி, ஆவி.ரவி ஆகியோர் ஒருங்கிணைத்திருந்தனர்.