மாலை 5 மணி அளவில் பேராவூரணி கோகனட் சிட்டி இன்ஸ்பயர் சங்கமும், ஸ்டார் லயன்ஸ் சங்கமும் இணைந்து, கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. பேராவூரணி புதிய பேருந்து நிலையத்திலிருந்து சேதுரோடு முக்கம் அண்ணா சிலை வரை ஊர்வலமாக வந்து, கார்கில் போரில் வீர மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றி, மலர் தூவி புகழஞ்சலி செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு, தலைவர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். மாவட்ட இணை பொருளாளர்
எம்.நீலகண்டன், வட்டாரத் தலைவர் எஸ்.பாண்டியராஜன், மாவட்டத் தலைவர் கே.இளங்கோ, சாமியப்பன், ராமநாதன்,மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏஎஸ்ஏ.தட்சிணாமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சாசன பொருளாளர் எஸ்.மைதீன் பிச்சை, முதல் துணைத் தலைவர் ராஜ்குமார், ராணுவ வீரர்கள், பேராவூரணி கோகனட் சிட்டி லயன்ஸ் சங்க முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்கள், ஸ்டார் லயன்ஸ் சங்க உறுப்பினர்கள் மற்றும் கடைவீதி வியாபாரிகள் திரளாக கலந்து கொண்டார்கள்.