பேராவூரணி கோகனட்சிட்டி இன்ஸ்பயர் லயன்ஸ் சங்கம் சார்பாக பேராவூரணி அரசு மருத்துவமனையில், நான்காவது வாரமாக சங்க உறுப்பினர் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ரவிச்சந்திரன் அவர்களின் புதல்வன் மௌரியன் பிறந்தநாளை முன்னிட்டு 200 புறநோயாளிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது. சங்கத் தலைவர் பி.ரமேஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சிக்கு, மாவட்ட இணை பொருளாளர் எம். நீலகண்டன், வட்டாரத் தலைவர்
எஸ்.பாண்டியராஜன், சாசனப் பொருளாளர்
எஸ்.மைதீன் பிச்சை, மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ எஸ் ஏ தெட்ணாமூர்த்தி, முதல் துணைத் தலைவர் ஜிவி.ராஜ்குமார், ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில், சங்கச் செயலாளர் ஜி.குமாரன், முன்னாள் செயலாளர்கள் டி வி குமார்(எ) பி.பழனிவேல் முன்னாள் பொருளாளர்கள் பி.பன்னீர்செல்வம், ஏ.சபரி குமார், ஜி.சங்கர் ஜவான், சிவானந்தம், சங்க உறுப்பினர்கள் ஜி.பிரதீஷ்,
கேஎஸ்.ரவிச்சந்திரன்,
ரமா ரவிச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.