தஞ்சாவூர், ஜூலை.27 -
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள களத்தூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், 'மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்' சனிக்கிழமை காலை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து குத்து விளக்கேற்றி துவக்கி வைத்து, சிறப்புரை ஆற்றினார். வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) க.செல்வேந்திரன் வரவேற்றார். மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி முன்னிலை வகித்தார்.
மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ஆர்.வெங்கடேஸ்வரன், வட்டாட்சியர் தெய்வானை (பேராவூரணி), கல்வி வளர்ச்சிக் குழுத் தலைவர் க.அன்பழகன் களத்தூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பெரியநாயகி, காலகம் ஒன்றியக் குழு உறுப்பினர் ராஜலட்சுமி ராஜ்குமார் வாழ்த்திப் பேசினர்.
ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஆர்.டி.மாரிமுத்து (களத்தூர்), செந்தில்குமார் (காலகம்), அமிர்தம் பழனிவேல் (மாவடுகுறிச்சி), சுரேகா அன்பழகன் (பழைய நகரம்), குணதா சரவணன் (தென்னங்குடி) மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இம் முகாமில், பல்வேறு அரசு துறைகளுக்கு நூற்றுக்கணக்கான கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.