சோழநாடு கிராமப்புற விளையாட்டு அறக்கட்டளையின் கெயின் ஸ்போர்ட்ஸ் அகாடமி நடத்திய மாநில அளவிலான தடகள போட்டிகள் சிறப்பாக நடைபெற்று முடிந்தது. நிகழ்வில், முறைப்படி ஒலிம்பிக் தீபம் ஏற்றப்பட்டு, கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு, விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டன. மாணவர்களுக்கான 1500 மீட்டர் ஓட்டம், மாணவிகளுக்கான 1500 மீட்டர் ஓட்டம், ஆண்களுக்கான சாட் பூட், பெண்களுக்கான ஷாட் புட், வயது வாரியாக மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கான ஓட்ட போட்டிகள், நீளம் தாண்டுதல், மெடிசின் பால் த்ரோ போன்ற போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றிப்பெற்றோருக்கு பரிசுகளும், தனிநபர் பட்டம் என்ற வெற்றியாளர்களுக்கு சைக்கிள்களும் வழங்கப்பட்டது. விழாவில், முக்கிய பிரமுகர்களும், பல்வேறு அறக்கட்டளை பொறுப்பாளர்களும், அரசியல் பிரமுகர்களும், அரிமா மற்றும் ரோட்டரி சங்க பிரமுகர்களும், வர்த்தக கழக பொறுப்பாளர்களும், உடற்கல்வி ஆசிரியர்களும், பத்திரிக்கையாளர்களும் திரளாக கலந்து கொண்டனர். இறுதியாக, அறக்கட்டளை பொறுப்பாளர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் நீலகண்டன் நன்றி கூறினார்.