தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தஞ்சாவூர் மாவட்ட கிளையின் மாவட்ட செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் பட்டுக்கோட்டை கண்டியன் தெரு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் க.அருள் அவர்கள் தலைமை தாங்கினார்,
மாவட்ட செயலாளர் செ.ராகவன்துரை அனைவரையும் வரவேற்று பேசினார்
மாநில செயற்குழு உறுப்பினர் ச.துரைப்பாண்டி மற்றும் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஆ.பாஸ்கர், கு.சகிலா திருவிடைமருதூர் வட்டாரத்தலைவர் மறைமணி ஆகியோர் சென்னையில் 29,30,31 ஆகிய தேதிகளில் பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் நடைபெறவிருக்கின்ற முற்றுகை போராட்டம் குறித்து விளக்கிப் பேசினர். இக்கூட்டத்தில் பேராவூரணி பட்டுக்கோட்டை திருவிடைமருதூர் மதுக்கூர் சேதுபாவாசத்திரம் அம்மாபேட்டை தஞ்சாவூர் பாபநாசம் திருவோணம் பூதலூர் திருவையாறு ஆகிய வட்டாரங்களை சேர்ந்த பொறுப்பாளர்கள் கலந்துகொண்டனர் .இறுதியாக, மாவட்டத் துணைத்தலைவர் நாகராஜன் நன்றி கூறினார்