குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அறிவுறுத்தல்

IT TEAM
0

 


பேராவூரணி, ஜூலை 5

குறுவை நெல் பயிருக்கு பயிர் காப்பீடு செய்திட விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் தெரிவித்துள்ளார்.



இதுகுறித்து பேராவூரணி வேளாண்மை உதவி இயக்குநர்(பொ) ராணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்படுவதாவது,


வெள்ளம், புயல், வறட்சி போன்ற இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் இழப்புகளுக்கு இழப்பீடு வழங்கிட புதிப்பிக்கப்பட்ட பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டம் நடப்பு குறுவை சாகுபடி பயிருக்கு செயல்படுத்தப்பட்டுள்ளது. நமது தஞ்சை மாவட்டத்திற்கு குறுவை பருவத்தில் பயிர் காப்பீட்டு திட்டத்தை செயல்படுத்திட ஷீமா பொது காப்பீடு நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டில் காரீப் சிறப்பு பருவத்தில் குறுவை நெல் பயிருக்கு காப்பீடு செய்துகொள்ள ஒரு ஏக்கருக்கு விவசாயிகள் செலுத்தவேண்டிய பிரீமிய தொகை ரூ.730- ஒரு ஏக்கருக்கான காப்பீடு தொகை ரூ.36 ஆயிரத்து 500 இத்திட்டத்தின் கீழ் பிரீமியம் செலுத்திட கடைசி நாள் -ஜூலை 31. இத்திட்டத்தின் கீழ் கடன் பெறும்; விவசாயிகள் அவர்கள் கடன்பெறும் வங்கிகளில் விருப்பத்தின் பெயரில் பயிர் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்துகொள்ளலாம். கடன் பெறும் மற்றும் கடன் பெறா விவசாயிகள் அனைவரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலமாகவோ தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது பொதுசேவை மையங்கள் மூலமாகவோ பதிவு செய்து கொள்ளலாம்.



எதிர்பாராத இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் மகசூல் இழப்புகளை ஈடுசெய்யும் பொருட்டு தாமதமின்றி உரிய காலத்தில் பயிர் காப்பீடு செய்து விவசாயிகள் அனைவரும் பயனடையுமாறு என தெரிவித்துள்ளார்.

Tags

கருத்துரையிடுக

0 கருத்துகள்
கருத்துரையிடுக (0)

#buttons=(Accept !) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !
To Top